Sunday, September 03, 2006

கிறுக்கல் ஐந்து

கிடா வெட்டு

கிடா வெட்டினார்கள்...

பூசாரி ஒருமுறை
புசிப்பவன் மறுமுறை!

Monday, July 24, 2006

கிறுக்கல் நான்கு

இதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்...

காட்டுத்தீ
மரத்தை அழிக்கும்.
காமத்தீ
சிரத்தை அழிக்கும்.

காட்டுத்தீ.
அணைத்தால் அடங்கும்.
காமத்தீ.
அணைத்தால் தொடங்கும்!

காட்டுத்தீ.
அவர் பசிக்கு
நமது உடமைகள்.
காமத்தீ.
இவர் பசிக்கு
நமது கடமைகள்.

காட்டுத்தீ.
தணிக்க கடல்
காமத்தீ.
தணிக்க உடல்

இதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்...
இவர்கள்...
யாரோ ஒருவரின்
இரு வடிவம்.
கிளம்பிவிட்டால்
தடுப்பது கடிணம்.

Friday, July 21, 2006

கிறுக்கல் மூன்று

பிரிவுத்துயர்...

உன்னைப்பற்றி
நினைக்கலாம் என
நினைக்கும்முன்னே...
உடலெங்கும் உற்சாகம்.

நான் மட்டுமா?
உலகே இப்படித்தான்.
இது
யாரோ கணக்கு.
இல்லைவிதி விலக்கு.

வாரம் ஒருமுறைதான்
அருள் புரிகிறாய்.
அந்நேரம்...
சொர்க்கத்தின் முழுவடிவாய்
தெரிகிறாய்.

காத்திருந்த உற்சாகம்
நீ வந்ததும் மறைகிறது.
ஆம்
நீ சென்றுவிடுவாய் என
மனதிற்கு தெரிகிறது.

இது கொடுமையா?
இல்லை
அதைவிட கொடுமையா?

இருக்கட்டும்.
இக்கொடுமை மூளையின்
சிறுமூலையில் இருக்கட்டும்.

நான் காத்திருப்பேன்
உனக்காக கண்கள் பூத்திருப்பேன்.

... சீக்கிரம் வா சனிக்கிழமையே...
சீக்கிரம் வா!

Wednesday, July 12, 2006

கிறுக்கல் இரண்டு

தப்புக்கணக்கு...

நவகிரகம் -
ஒன்பது முறை சுற்றவேண்டும்.

என் சுற்றுக்களை கணக்கில்வைத்து
வேண்டுதலை தவறவிட்டேன்!

Friday, July 07, 2006

கிறுக்கல் ஒன்று

பெண்ணே சிரிக்காதே!... நீ சிரித்தால் சிதறுவது முத்துக்கள் மட்டுமல்ல
என் கனவுகளும் இலட்சியங்கலும் தான்.


உன் கண்கள்...

மலர் மாலையில் இரு வண்டுகள்.
தேன் எடுப்பதற்கல்ல...
கொடுப்பதற்கு!
---
நீ பார்ப்பதற்க்கு.
நான் பார்த்துக்கொண்டே இருப்பதற்க்கு!
----
எமகாதகர்களையும் கொன்றுவிடும்
எமதூதர்கள்!
----
தோட்டாக்கள் தீரா
GUNகள்!
-----
அதிசயம்!

மீன் மனிதனிற்க்கு
தூண்டில் வீசுகிறது.